டில்லி:

நாடு முழுவதும்   வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

2017-2018 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31 கடைசித் தேதி ஆகும்.

கடந்த 2 நாட்களாக அரசு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், பொதுமக்கள் வரி செலுத்தும் வகையில், வருமான வரித் துறை இயங்கி வந்தது.

இந்நிலையில் இன்று மார்ச் 31-ம் தேதி சனிக்கிழமை வார விடுமுறை தினமாக இருந்த நிலையில்  இன்றும் இயங்கும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதே போல் வங்கிகளும் இன்று இரவு 8 மணி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  மேலும் ஏப்ரல் 2ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.