
தி.மு.கழகத்தின் செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடினார்.

காலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.
பிறகு கட்சி மூத்த தலைவர் அன்பழன் இல்லம் சென்று வாழ்த்து பெற்றார்.
மேலும், துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel