
96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார்.
தற்போது கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் பாடல் ஆல்பம் மறையாத கண்ணீர் இல்லை.
தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
தற்போது இந்த பாடலின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். மதன் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel