மதுரை: தமிழ்நாட்டில் பல சார்கள், தம்பிகள்  இன்னும் உலவி கொண்டிருக்கிறார்கள் என மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அண்ணாமலை  கூறினார்.

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள பாலியம் சம்பவங்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் வெளியான தீர்ப்பிலும் யார் அந்த கேள்வி மர்மமாகவே முடிவுபெற்றுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், குற்றவாளியான ஞானசேகரன், சம்பவம் நடைபெற்ற அன்று, காவல்துறை அதிகாரி, அந்த பகுதி திமுக செயலாளர் உடன்பல முறை பேசியிருப்பதாக கூறி அதற்கான சிடிஆர் ஆதாரங்களை வெளியிட்டார்.  இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை மற்றும் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, , மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, எந்த வேலையும் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தை ஓட்டி வருகிறது என்றும் விமர்சித்தவர்,  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று கூறினார்.

தமிழகத்தில் இன்று மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்று கேட்டால் நிம்மதியாக கிடையாது.. காரணம் என்னவென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவிக் கொண்டு இருக்கும்போது எப்படி பெண்கள் நிம்மதியாக இருப்பர்.

மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து சினிமா படம் தயாரிக்கக் கூடிய தம்பிகள் உலவிக்கொண்டு இருக்கும் போது எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும்.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, எந்த வேலையும் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தை கடத்திக் கொண்டு இருந்தால் எப்படி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஒரு சமுதாயத்தை சார்ந்த, ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருந்தால் எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும்.

நிம்மதி இல்லாத வாழ்க்கை இதையெல்லாம் தாண்டி, நடுத்தர மக்கள் வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது.

கொங்கு மண்டலத்துக்கு வந்தீர்கள் என்றால், முதியோர்களை குறிவைத்து கொல்கிறார்கள். தென் பகுதிகளுக்கு சென்றீர்கள் என்றால் சாதி வன்கொடுமையில் கொல்கிறார்கள்.. சென்னைக்கு வந்தீங்க என்றால் கூலிப்படைகளை ஏவி கொல்கின்றார்கள். எங்கேயும், யாருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலம் நடந்துகொண்டு இருக்கிறது. இதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது.. ஆனால்! மதுரையில் பேசிய அமித்ஷா 11 ஆண்டுகளாக நாம செய்திருக்கின்ற மிக முக்கியமான சாதனைகள் என்னவென்றால், 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ரொட்டி, மகடா, பக்கான் ஆகிய 3 வார்த்தைகளை மட்டுமே வைத்து அரசியல் செய்தது. வறுமை அப்படியே இருந்தது. வறுமை இருந்ததாலேயே அரசியல் செய்ய முடிந்தது.

2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.15 டாலர், அதாவது 180 ரூபாய்க்கு கீழே வருமானம் பெறக்கூடியவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 16.2 சதவீதம் பேர் இருந்தனர். நமது ஒற்றை இலக்கு இதுதான் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டில் இது வெறும் 2.3 சதவீதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறோம். இது மிகப்பெரிய சாதனை.

உலக வங்கி ஆய்வறிக்கை – ஏப்ரல் 2025 இல் கூட, உலகில் மிக வேகமாக வறுமையை கடந்த 10 ஆண்டுகளில் ஒழித்த முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இது தான் மோடியின் சாதனை. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜந்தன் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் என எல்லா திட்டத்தையும் ஒரே வீட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டு நமது ஒற்றை இலக்கு, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. இது தான் நம் இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.