நாட்டில் பாரதியஜனதா ஆட்சி மீண்டும் தனது இந்துத்துவா கொள்கைகளால் ஆட்சியை பிடித்துள் ளது. ஆனால் தென் மாநிலங்களில் இந்துத்துவா கொள்கைகளுக்கு மக்களிடையே ஆதரவு கிட்டாத நிலையில், பெரும் தோல்வி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் வலதுசாரி அமைப்பினர், தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்து மதம் அழிக்கப்பட்டு வருவதாக கூக்குரலிடுகிறார்கள்.. .அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், அவர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை, கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை காரணம் இங்கு யாரும் யாருக்கும் கட்டளை இட முடியாது.
ஆனால், மேலே உள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும்… சாமி கும்பிட பக்தர்கள் வந்து வணங்கி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தீபாராதனை காட்ட வேண்டிய பூசாரியோ… ஒய்யாரமாக உட்கார்ந்து மொபைல் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறார்… எதிர் நிற்கும் பக்தர்களை கண்டுக்காமல் அவரது பணியை செய்யாமல் நிந்தனை செய்கிறார்…
இது சாதரணமாக நாம் பல கோவில்களில் காணும் நிகழ்வுதான்.. அதுபோல பல கோவிலுக் குள்ளே நடைபெறும் பலான நிகழ்வுகள், பக்தர்களிடம் தீபாராதனை தட்டில் தட்சனை கேட்டு நச்சரித்தல் போன்ற கண்ணியமற்ற, அநாகரிக நடவடிக்கைகளால்தான் இந்து மதமும், இந்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுப்பதிற்கில்ல.
ஆனால், பல அரசியல்வாதிகளோ இந்து மதத்தை மற்றோரு மதத்தின்ர் அழிக்க பார்க்கிறார்கள் என்று கூக்குரலிடுகின்றனர்…. கடவுளை காண வந்த பக்தர்களைப் பற்றிய அக்கறை இல்லாமம் செயல்படும் இதுபோன்றவர்களால்தான் இந்து மக்கள்அவமதிக்கப்படுகிறார்களே ஒழிய தொன்மையான மதமான இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது.