சென்னை:

ஓபிஎஸ், கமல் வாக்குச்சாவடி உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், வாக்குப்பதிவு தாமதமானது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் வாக்களித்த வாக்குச் சாவடி உள்பட தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக  தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர், பலர் வாக்களிக்காமல் திரும்பி சென்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் இந்திராகாந்தி பள்ளி வாக்குச் சாவடி இயந்திரம் பழுதானதால் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் வாக்களித்த வாக்குப்பதிவுமையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. கமல் மற்றும் சுருதிஹாசன் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட நந்தனம் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதாகி வாக்குப்பதிவு தாமதமானதால் வாக்காளர்கள் பலர் ஓட்டுபோடாமல் திரும்பிச் சென்றனர்

புழல் பப்ளிராஜா பள்ளியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு காரணமாக 7.45 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்த பெரியகுளம் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு. இதன் காரணமாக அங்கும் வாக்குப்பதிவு  தாமதமானது.

மேலும்,  தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது வாக்கு இயந்திரம் பழுதால் ஓட்டு போட முடியாமல் ஏராளமான வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் காத்திருந்து தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டி சென்றனர்.

குமரியில் மூன்று இடங்களில் வாக்கு இயந்திரம் பழுது கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி, சுசீந்திரம், லாயம் ஆகிய இடங்கிளில் வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். ‘

ஈரோட்டில் 3 இடத்தில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  சேலம் காமநாயக்கன்பட்டி, கும்பகோணம் அருகே காக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் வாக்கு இயந்திரங்கள் பழுதானதால் ஏராளமானோர் காத்திருந்து வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் 31வது வாக்குசாவடியில் 31 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரம் கோளாறு; வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் தவிப்பு.

மதுரை அருகே உள்ள  உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது! சுமார் 2 மணி நேரம் தாமதமானது.

மேலும் இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் மக்கள் அவதியடைந்தனர்.