சென்னை

ஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மனோகர் பாரிக்கரின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என இந்து என் ராம் தெரிவித்துள்ளர்.

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் கடும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த போதிலும் விலை விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது. இதற்கிடையில் இது குறித்த வழக்கின் தீர்ப்பில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் என் ராம் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அதில் காணப்படுவதாவது :

“ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் உடன் பாதுகாப்பு அமைசகம் பேச்சு வார்த்தை நடத்திய போதே பிர்ரதம்ர் அலுவலகமும் இணையாக பேச்சு வார்த்தைகள் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரே நேரத்தில் இரு பேச்சு வார்த்தைகள் நடந்ததால் பாதுகப்பு அமைச்சக பேச்சு வார்த்தை பலவீனமானது. இது குறித்த அறிக்கை ஒன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த அறிக்கையில் ’இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் அங்கம் வகிக்காத எந்த அதிகாரிகளும் பிரான்ஸ் அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக வேண்டும் என்று தாங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அறிவுரை வழங்கலாம். அத்துடன் பாதுகாப்பு அமைச்சகக் குழு நடத்தும் பேச்சுவார்த்தைகளினால் ஏற்படும் விளைவில் பிரதமர் அலுவலகம் நம்பிக்கை கொள்ளவில்லை எனும்போது மட்டும் திருத்தப்பட்ட வேறு ஒரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகம் முறையான தளத்தில் மேற்கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பிரமாணப் பத்திரத்தில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 7 உறுப்பினர்கள் கொண்ட குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சு வார்த்தை நடத்தியதைப் பற்றி குறிப்பிடவில்லை. தி இந்து நாளேட்டுக்கு கிடைத்தா தகவலின்படி பிரதமர் அலுவலக பேச்சு வார்த்தைகளுக்கும் பாதுகாப்பு துறை நிலைப்பாட்டுக்கும் இடையே முரன்பாடுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அப்போதைய பாதுகாப்பு செயலர் மோகன்குமார் எழுதிய கடிதத்தில் பிரதமர் அலுவலகம் நடத்தும் பேச்சு வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் எனவும் அது பாதுகாப்பு துறையின் பேச்சு வார்த்தைகளை வலிவற்றதாக்குவதாகவும் குறிப்பிட்டுளார்.

அப்போது 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூல ஒப்பந்தத்துக்கு தொடர்பே இல்லாத புதிய ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அறிவிக்கிறார். அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் பிராசுவா ஹொலாந்தே குடியரசு தின விழாவுக்கு டில்லி வருகிறார். அந்த சமயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அதுமட்டுமின்றி பாதுகாப்பு அமைச்சக குறிப்பின் படி பிரதமர் அலுவலகமும் இணையாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறது என்ற விவரம் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் ஜெனரல் ஸ்டீபன் ரெப் அக்டோபர் 23, 2015-ல் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவே தெரியவந்துள்ளது.

மேலும் இந்தக் கடிதத்தில், பிரதமர் அலுவலக இணைச் செயலர் ஜாவேத் அஷ்ரப், மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரின் ராஜீய ஆலோசகர் லூயி வாஸி என்பவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் , அதாவது 201-10-2015-ல் நடந்த தொலைபேசி உரையாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜெனரல் ரெப்பின் கடிதத்தை பாதுகாப்பு அமைச்சகம் பிரதமர் அலுலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தது. இதை இந்திய பேச்சு வார்த்தைக்குழுவின் தலைவர் எஸ்பிபி சின்கா மற்றும் துணைத்தலைவர் அஷ்ரவ் இதனை எழுத்து மூலம் உறுதி செய்தனர். இந்த கடிதத்துக்கு நவம்பர் 11, 2015-ல் பதிலளித்த பிரதமர் அலுவலக இணைச்செயலர் அஷ்ரப், தான் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார், மேலும் பிரான்ஸ் அதிபர் அலுவலக வழிகாட்டுதலின் படி வாஸி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜெனரல் ரெப் கடிதத்தில் உள்ள விஷயங்கள் தொடர்பாக பேசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏ.எஃப்.பி செய்தி ஏஜென்சியில் பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே கூறியதாக லே மோண்டே என்ற ஊடகம் செப்டம்பர் 2018-ல் வெளியிட்ட செய்திகளின்படி பிரதமர் மோடி அரசின் புதிய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயர் தோன்றியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமாகும்.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பேச்சு வார்த்தைகளுக்கு நேர்மாறாக பிரதமர் அலுவலகம் நடத்திய பேச்சு வார்த்தைகளின் படி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள்து. இதற்கான காரணம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு நன்கு தெரிந்திருக்கக் கூடும். எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.