டில்லி:
இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்துக் கொண்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ‘‘எனக்கு அவரை பிடிக்கும். தேசத்திற்காக பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. அதிகாரத்துவத்தின் கூறுகளை நவீனப்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனும் எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது.

இந்திய பொருளாதாரத்தை நவீனப்படுத்த மன்மோகன் சிங் எடுத்த நடவடிக்கையை பார்க்கையில், அது இந்திய பொருளாதாரத்தை நவீனப்படுத்தியதற்கான முதல்படியாகும்,’’ என்றார்.
மோடியும், மன்மோகன் சிங்கும் என்னிடம் நேர்மையாக நடந்து கொண்டனர். இருவரின் பதவிக்காலத்திலும் இந்தியா&அமெரிக்கா இடையிலான நல்லுறவு மேலும் வலுவடைந்தது’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel