டில்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பகுதிக்கு தன்னை விட தகுதி வாய்ந்தவர் பிரணாப் முகர்ஜி தான் என கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டில்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.  அதில் அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

அந்த விழாவில் மன்மோகன் சிங், “முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு மாபெரும் அரசியல் வாதி. நாட்டின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.  நான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அழைத்ததால் அரசியலில் நுழைந்தேன்.  பிறகு நிதி அமைச்சர் ஆனேன்.  என்னை பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி தேர்ந்தெடுத்தார்.  ஆனால் என்னை விட அந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர் பிரணாப் முகர்ஜிதான்.  கட்சித் தலைமையின் ஆணையையொட்டி நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.” என கூறினார்.