சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்தியஅரசும் துங்கம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் துங்கம் அனுசரிப்பதாகஅறிவித்து உள்ளது.
இதையடுத்து, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தபோது, இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தியவர் மன்மோகன் சிங். அவரது மறைவு இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி சர்வ தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது மறைவையொட்டி ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் 26 முதல் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதனால், இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி ஜனவரி 01ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும். தமிழ்நாட்டில் 7 நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ளது.
மாநிலங்களில் எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வமான பொழுதுபோக்குகள் இருக்காது அரசு இறுதிச் சடங்கு டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படும்.