சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, 2 கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் இன்று கையெழுத்து ஆனது.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து 2வது நாளாக நீடித்த நிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். இதுபற்றிய தகவல்கள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றார்.