புதுடெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.