இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என  சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகத்தால் இந்த வழக்கை மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக செய்தி வந்துள்ளது.

வடகிழக்கு மாநிலம்  மணிப்பூரில், இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை வன்முறையை உருவாக்கியது. முன்னதாக,   மைதி சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்ப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி என பழங்குடியினர் வன்முறையை கையிலெடுத்தனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல்கள், தீ வைப்பு சம்பவங்கள், பெண்கள் வன்கொடுமை போன்றவை நடைபெற்றது.  தொடர்ச்சியான வன்முறைகளுக்கு மத்தியில்,  மே 4ந்தேதி எடுக்கப்பட்ட ஒரு விடியோ சமீபத்தில் வெளியானது. அதில், ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தை சேர்ந்த  இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து செல்லச் செய்து, இறுதியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வீடியோ வைலான பிறகே, மணிப்பூர் வன்முறையின் தீவிரம் வெளிச்சத்துக்கு வந்தது. உச்சநீதிமன்றம், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்தனர்.  வடகிழக்கு மாநிலத்தில் நிலவும் விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளும் வெளியேயும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போரைத் தூண்டியது.

இதற்கிடையில், இந்த வீடியோ விவகாரத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருப்பதாக கூறிய உள்துறை, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கூறியது. இதைத் தொடர்ந்து,  த்திய உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) மணிப்பூர் வைரல் வீடியோ வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) வியாழக்கிழமை பரிந்துரைத்தது.  அதன்படி, தற்போது, சிபிஐ வைரல் வீடியோ தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில், பெண்களின் நிர்வாண ஊர்வலம் தொடர்பாக கொடூரமான வீடியோவை படம் பிடித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவரது மொபைல் போன் பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.