சென்னை:
மணிப்பூர் வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ளன; விளையாட்டு போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம்
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.