டில்லி

ள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மணிப்பூர் மாநில மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவர் இடையே வெடித்த வன்முறை காரணமாக மாநிலமே ஸ்தம்பித்து போனது. ராணுவம் வரவழைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஆயினும் வன்முறை முழுவதுமாக முடிவடையவில்லை.   இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.

இதில் பாஜகவை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள், குக்கி மக்கள் கூட்டணியின் இருவர் மற்றும் ஒரு சுயேச்சை உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.  அவர்கள் அமித்ஷாவிடம் மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்து தெரிவித்துள்ளனர்.  மேலும் தங்கள் சமூகத்துக்கென தனி நிர்வாகம் தேவை என ஒரு கோரிக்கையை அமைச்சரிடம் வைத்தனர்.

மேலும் அவர்கள் அமித்ஷாவிடம், “மக்கள் பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநில அரசிடம் நம்பிக்கை இழந்து விட்டனர்.  அவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத பள்ளத்தாக்கில் மீண்டும் குடியேறுவதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.