இம்பால்:

மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுக்கான துறைகள் தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் விபரம்..

முதல்வர் பைரன் சிங் தனது அமைச்சர்களுக்கு இலாக்காக்ளை ஒதுக்கியுள்ளார். முக்கிய துறைகளான உள்துறை, போக்குவரத்து, பொது நிர்வாகம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், ஊழல் கண்காணிப்பு, பட்டு புழு வளர்ப்பு ஆகியவற்றை அவர் வைத்துக் கொண்டுள்ளார்.

துணை முதல்வர் ஜோய்குமார் வசம் நிதி, கலால், வரிவிதிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம், புள்ளியியல், விமான போக்குவரத்து ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை, ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, நிர்வாக மேம்பாடு, வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பிஸ்வஜித் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயந்தகுமார் வசம் சுகாதாரம், குடும்ப நலன், சட்டம், சட்டமன்றம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லெட்பவ் ஹாவ்கிப் வசம் இளைஞர் நலன், விளையாட்டு, பாசனம், வெள்ள கட்டுப்பாடு துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கரம் சியாம் வசம் பொது விநியோகம், நுகர்வோர் நலன், எடை மற்றும் அளவை, வருவாய், மறுவாழ்வு துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காயிஷி வசம் மலைவாழ், மலை பகுதி, மீன்வளம் ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஷியாம் குமார் வசம் வனம், சுற்றுசூழல், தோட்டக்கலை, மண் பாதுகாப்பு, நகர திட்டமைப்பு துறைகளும், ஹங்காலியன் வசம் வேளாண், கால்நடை மற்றும் விலங்குகள் நலத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோக்சோம் ரதிசியாம் வசம் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைகளும், நெம்ச கிப்ஜென் வசம் சமூக நலன் மற்றும் கூட்டுறவு துறைகளும், லோசி திக்கோ வசம் அச்சு மற்றும் எழுது பொருட்கள் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாஜ எம்எல்ஏ சரத்சந்திரா முதல்வரின் பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புகளை மணிப்பூர் மாநில தலைமைச் செயலாளர் நபகிஷோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.