பா.ஜ. முதல்வர் மகனுக்கு 5 ஆண்டு சிறை!

மணிப்பூர் மாநில பாரதியஜனதா முதலமைச்சர் பிரேன் சிங்

மணிப்பூர்,

ணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்மீது நடைபெற்று வந்த கொலை வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு, தனக்கு முன்னாள் சென்ற கார், தனது காருக்கு வழிவிடாத கோபத்தில், அந்த கார் ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டார் மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்கின் மகன் அஜய்மீட்டாய்.

இந்த துப்பாக்கி சூட்டில் காரை ஓட்டிவந்த இரோம் ரோஜர் என்பவர் பரிதாபமாக இறந்தார். பட்ட பகலில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த பொதுமக்களின் அழுத்தம் காரணமாக முதல்வர்மகன்மீது புகார் பதியப்பட்டு மணிப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது  பிரேன் சிங்கின் மகன் அஜய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்சநீதிமன்றம் நாடியதை தொடர்ந்து தற்போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரேன் சிங் கடந்த மார்ச்சில் முதலமைச்சராக பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Manipur BJP Chief Minister's son sentenced to 5 years in jail for Murder case