ஆன்லைன் வர்த்தகம்: நாடு முழுவதும் 9 லட்சம் மருந்துகடைகள் அடைப்பு!

டில்லி,

ன்லைன் மருந்து வணிகம், வரி விதிப்பு போன்றவற்றை எதிர்த்து  இன்று நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகடைகள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் கடுமையாக கட்டுப்பாடுகளை எதிர்த்தும், ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு புதியதாக அமல்படுதத்தும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து, அகில இந்திய மருந்தாளுநர்கள் கூட்டமைப்பு இன்று ஸ்டிரைக் நடத்த ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.

அதைத்தொடர்ந்து இந்த ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய மருந்தாளுநர் சங்கம்,  ஏற்கனவே மத்திய அரசுக்கும், சுகாதாரத்து றைக்கும் தகவல் தெரிவித்துள்ளது  என்றும் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை என்று கூறி உள்ளது..

அதைத்தொடர்ந்து இன்று நாடு முழுவதும் மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், மருத்துவமனைகளில் மற்றும் சுற்றியுள்ள அவசர சேவை மருந்தகங்கள் திறந்த நிலையிலும், சில்லறை விற்பனையாளர்கள்  சங்கத்தின் தலைவரான சந்தீப் நங்கியா கூறி உள்ளார்.

மருந்து சில்லரை விற்பனையாளர்கள் நீண்டகாலமாக விற்பனை வரம்பில் உயர்வை கோரி வருகின்றனர், எங்களது கோரிக்கைகளை மறுத்து வரும் அரசு,  வேலைநிறுத்தத்திற்கு சில மணி நேரம் முன்பு அவர்கள் எங்களை உத்தரவாதமற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் என்றும், மருந்து சில்லரை விற்பனையாளர்கள் நீண்டகாலமாக விற்பனை வரம்பில் உயர்வை கோரி வருகின்றனர்,

ஆனால், மத்திய அரசு, ‘ஆன்லைன்’ மருந்து வணிக அனுமதி சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், மருந்து வணிக உரிம கட்டணத்தை, 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது.

இதை எதிர்த்து, இன்று மருந்து கடைகளை மூடி, மருந்து வணிகர் சங்கத்தினர்  தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இன்று மத்திய அரசை கண்டித்து  டில்லி ஜந்தர் மந்திரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.

தமிழகத்தில்

தமிழகத்தில் மருந்து வணிகர்கள்  இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவனைகளில் செயல்படும் மருந்தகங்கள் தவிர மீதமுள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகள், இன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சென்னை, மதுரை, கரூர் மாவட்டங்களில் உள்ள, தங்கள் சங்கத்தின், 10 ஆயிரம் உறுப்பினர்கள், இன்று கடையடைப்பில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

கறுப்பு பேட்ஜ் அணிந்து, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் இந்த போராட்டம் குறித்து கூறும்போது

தமிழகத்தில் உள்ள, 197 கூட்டுறவு மருந்து கடைகளும், 111 அம்மா மருந்தகங்களும் இன்று திறந்து இருக்கும் என்றார். மாலை, 4:00 மணிக்கு மேல், அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


English Summary
Against Online Business: 9 lakh pharmacies strike all over india