ரஜினியின் தாய்,தந்தைக்கு மணி மண்டபம் கட்டிய ரசிகர்…!

 

ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவிற்கு தனது சொந்த நிலத்தில் திருச்சி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மணிமண்டபம் கட்டியுள்ளார்.

திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருப்பவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). இவர், திருச்சி குமாரமங்கலம் பைபாஸ் சாலை அருகில் தனக்குச் சொந்தமான சுமார் 1,850 சதுர அடி இடத்தில் நடிகர் ரஜினியின் பெற்றோர் ராமோஜிராவ் – ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். வரும் 25ம் தேதி இந்த மண்டபத்தை ரஜினியின் சார்பில் அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் திறந்து வைக்கிறார்.

இந்த மணிமண்டபத்திற்கு திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் திறப்பு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Manimandapan, rajini, trichy
-=-