டில்லி:
பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி உத்தரவை தொடர்ந்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்.
குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மூத்த தலைவர் மணிசங்கர் கூறுகையில், ‘‘மோடி கீழ்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் ஏன் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன்?’’ என்றார்.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மணிசங்கர் அய்யரின் விமர்சனத்திற்கு குஜராத் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்’’ என்றார்.
மணிசங்கர் அய்யர் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல்காந்தி கூறினார். இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் ஆதரிக்காது எனவும் ராகுல் கூறினார்.
இதை தொடர்ந்து மணிசங்கர் அய்யர் கூறுகையில், ‘‘எனது கருத்து காயப்படுத்தியிருந்தால் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தரம் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் நான் அவரை விமர்சிக்கவில்லை’’ என்றார்.