திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய இயக்குனர் மணிரத்னம்….!

Must read

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் திரையுலகினரும் நிதியுதவியளித்து வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

 

More articles

Latest article