மங்களூர்
மங்களூர் நகராட்சி உறுப்பினர் மனோகர் ஷெட்டி என்பவர் தானே கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.
மங்களூர் நகராட்சிக்குட்பட்ட கத்ரி வட்டத்தின் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மனோகர் ஷெட்டி ஆவார், இந்த வட்டத்தில் உள்ள கத்ரி கம்பாலா பகுதியில் ஒரு கால்வாயில் கழிவு நீர், மழை நீர் மற்றும் குப்பை சேர்ந்ததால் அடைப்பு ஏற்பட்டு சாலை எங்கும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் மிகவும் துயரம் ஏற்பட்ட்ட்து
அந்த பகுதிக்கு வந்த மனோகர் ஷெட்டி மாநகராட்சி அலுவலகத்துக்கு ஒரு வேகமாக நீர் தெளிக்கும் பம்பை அனுப்பச் சொல்லி அதை அந்த கால்வாயில் செலுத்தினார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அதன் பிறகு அந்த பம்பை இயக்குபவரிடம் கால்வாயில் இறங்கி அங்குள்ள குப்பைகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஊழியர் அது தனது பணி இல்லை எனக் கூறி மறுத்துள்ளார்.
இதையொட்டி ஷெட்டி தானே அந்த கால்வாய் மேன் ஹோல் வழியாக உள்ளே இறங்கி அடைப்பில் இருந்த குப்பைகளை அகற்றி உள்ளார். அதைக் கண்ட 4 சுத்திகரிப்பு தொழிலாளிகளும் அவருடன் உள்ளே இறங்கி உள்ளனர். அந்த கால்வாய் 8 அடி ஆழத்துடன் மிகவும் இருட்டாக இருந்துள்ளது டார்ச் லைட் வெளிச்சத்தில் அங்கிருந்த குப்பைகளை ஐவருமாக அகற்றி உள்ளனர்.
இது குறித்து மனோகர் ஷெட்டி, “மங்களூர் நகரில் இது போன்ற பணிகளைச் செய்வது அனைவருக்கும் பழக்கமான ஒன்றாகும். ஏழைகள் என்பதால் ஊழியர்களை இந்த பணி செய்ய வற்புறுத்த முடியாது. அவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் யார் பொறுப்பு? இதனால் நானே இறங்கினேன். இது போன்ற அவசர நேரத்தில் அதிகாரிகள் உதவியை எதிர்பார்க்க முடியாது இதுவும் எனது கடமை என்பதால் நானே இறங்கி சுத்தம் செய்தேன்” என தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.