சென்னை: மாங்காட்டில், பள்ளி பாதுகாப்பானது இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத் தில், கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரது 2வது மகள்நந்தினி (17). இவர் பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பெற்றோர்கள் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த நந்தினி ஒரு அறையின் கதைவை பூட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய அவரது தாய், மகள் இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் நந்தினியின் அறையில் இருந்து, ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், Stop sexual Harrasment…. இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி. எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என எழுதி இருந்ததார்.
இதையடுத்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது தோழிகளிடமும் விசாரித்தனர். அப்போது, நந்தினி கடந்த சில தினங்களாக நந்தினி யாரிடமும் பேசாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அந்த மாணவியின் நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் நந்தினி உபயோகப்படுத்தி வந்த செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில், பலருடன் மாணவி பேசியது தெரிய வந்தது. அவர்களில் குறிப்பிட்ட 4பேரை அழைத்து விசாரித்தனர்.
அதில், மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21), என்ப கல்லூரி மாணவர், அந்த மாணவிக்கு செல்போனில் ஆபாச தகவல்கள், ஆபாசமாக படங்கள், குறுந்தகவல்கள் எல்லாம் அனுப்பி இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையில், நந்தினியை விக்னேஷ் காதலித்து வந்ததாகவும் தற்போது விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செல்போனில் இருந்த தகவல்களின் அடிப்படையில் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விக்னேஷ் குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஈ.சி.ஈ மூன்றாமாண்டு படித்து வருகிறார்.