வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்ட ட்வீட்டில், மாநாடு பணிகள் முடிவடைந்ததாக குறிப்பிட்டு, வெங்கட்பிரபு, சிம்பு, ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்து விட்டு படத்தை திரையரங்கில் வெளியிடுவது என்பதில் சுரேஷ் காமாட்சி உறுதியாக உள்ளார்.