அமெரிக்க வரலாற்றில் கருப்பு தினமாக கருதப்படும் ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடுளுமன்றத்திற்கு வெளியில் திரண்ட டிரம்ப் ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு இடையில் இந்திய தேசிய கொடி பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான வின்சென்ட் சேவியர் “நான் தான் இந்திய கொடியுடன் கலந்து கொண்டேன்” என்று தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இவரை பற்றிய தகவல்களை கசிய விட்ட சில சமூகவலைதள பயணர்கள், இவரும் சசி தரூரும் 2015 ம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்று சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இதுகுறித்த உண்மையை அறிய விரும்பிய இணையதள செய்தி நிறுவனங்கள் இவரது பல்வேறு புகைப்படங்களை தோண்டியெடுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் இந்தியா டுடே செய்தி நிறுவனம் இவரை நேரடியாக தொடர்பு கொண்டதில்

தான் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரென்றும், 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் இவர் டிரம்பின் குடியரசு கட்சியின் உறுப்பினர் என்றும் அமெரிக்காவில் இதற்கு முன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது மற்றும் அவர்களுடன் பழகுவதர்கான சந்தர்ப்பத்தை ஏற்படித்திக்கொள்வதை தனது பொழுதுபோக்காக செய்து வருவதாகவும்.

சசி தரூர் மட்டுமன்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தான் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உங்களது அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு.

நான் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் மற்றபடி எனக்கு இந்திய அரசியலில் எனக்கு அதிக விருப்பமில்லை என்று கூறி நழுவினார்.

போராட்டத்தில் இவருடன் கலந்து கொண்ட கிருஷ்ணா குடிபட்டியின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்த வின்சென்ட் அதனை தற்போது நீக்கியுள்ளார்.

கிருஷ்ணா குடிபட்டி தீவிர பா.ஜ.க. ஆதரவாளர் என்பதும் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்பதும் அவர் அங்குள்ள விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிட தக்கது.

https://twitter.com/mustikhan/status/878860142082760704

அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்திராத பெரும் வன்முறையில் முடிந்த இந்த போராட்டத்தை உலக தலைவர்கள் பலரும் கண்டித்திருந்த நிலையில், இந்திய பத்திரிகைகள் இந்திய கொடியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சசி தரூருக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தின, இதுகுறித்த உண்மையை அறிய ஆல்ட் நியூஸ் மேற்கொண்ட முயற்சியில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது.

தான் ஒரு பா.ஜ.க. அபிமானி என்று வின்சென்ட் சேவியர், இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியை மேற்கோள் காட்டி ஆல்ட் நியூஸ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.