குஜராத் மாநிலம் கிர் மாவட்டத்தில் உள்ள நவ உக்லா பகுதியில் வசிக்கும் விவசாயக்கூலியான பிரபுல்பாய், புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார்.

பக்கத்து தாலுகாவை சேர்ந்த அவர், குடும்பத்துடன் நவ உக்லாவில் தங்கி இருந்து பண்னை ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்தார்.

வீட்டருகே உள்ள தோட்டத்துக்கு மனைவி மற்றும் 4 வயது மகனுடன் அந்த தொழிலாளி சென்றிருந்தார்.

தோட்டத்தில் உள்ள முருங்கை. மரத்தில் ஏறி அவர் முருங்கைக்காய் பறித்து கொண்டிருந்தார்.

Representative image

மரத்துக்கு கீழே அவரது மனைவியும், மகனும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை, சிறுவன் மீது பாய்ந்து கழுத்தை கடித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ந்து போன பிரபுல்பாய், மரத்தில் இருந்து கீழே குதித்து அலறினார்.

இதனால் அந்த சிறுத்தை தப்பி ஓடி விட்டது. எனினும் சிறுத்தை கழுத்தில் கடித்ததால், சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்து போனான்.

கடந்த சில நாட்களில் அந்த பகுதியில் வன விலங்குகள் தாக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர்.

– பா. பாரதி