புதுடெல்லி:
ரூபாய் நோட்டு தடையால் நாடே சில்லறை தட்டுப்பாடில் அல்லாடிக் கொண்டிருக்க தனக்கு அவசர தேவை என வருபவர்களுக்கு வேறு வழியில்லாமல் டெல்லியில் உள்ள ஜாமியா கூட்டுறவு வங்கி அவர்கள் கொண்டுவரும் பணத்தை 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி தோளில் வைத்து அனுப்புகிறது.
இம்திகாஸ் ஆலம் என்ற பொது தொடர்புத்துறை ஊழியருக்கு கோவா செல்ல வேண்டிய அவசரம். ஒரு 20,000 ரூபாய்க்கு சில்லறை மாற்ற மணிக்கணக்கில் அவர் வங்கியின் வரிசையில் காத்திருந்துவிட்டு வங்கி மேலாளரிடம் தனது இக்கட்டான நிலையை எடுத்து கூறவே அவர் 20,000-க்கான சில்லறையை 10 ரூபாய் நாணயங்களாக வாங்கிக் கொள்ளுகிறீர்களா? என்று அவர் கேட்க அதற்கு ஆலம் ஒப்புக்கொண்டார். அடுத்த 15 நிமிடங்களில் ஒரு மூட்டையில் 20,000 ரூபாய்களுக்கான சில்லறை 10 ரூபாய் நாணயங்களாக ஒரு மூட்டையில் கட்டி கொடுக்கப்பட்டது.
மூட்டையில் உள்ள பணத்தின் எடை 15 கிலோவாகும். ஆனால் இந்த சில்லறை மூட்டையை சுமந்து கொண்டு ஆலம் எப்படி கோவா பயணப்படுவாரோ தெரியவில்லை!