லக்னோ:

உ.பி. மாநிலத்தில், மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க முன் வராததால், இறந்தவரின் உடலை தோளில் தூக்கி சென்ற அவலம் நடைபெற்றது.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியான நிலையில் மீண்டும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

 

உ.பி மாநிலத்தில் உள்ள  சாம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனளிக்கமல் மரணம் அடைந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம்  ஆம்புலன்ஸ் வசதி செய்து தர கோரினர்.

ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி இறந்தவரின் உடலை, உறவினர் ஒருவர்  தோளில் தூக்கிக் கொண்டு சென்றார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.