
லண்டன்: விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் பலியானதாக லண்டன் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கென்யா ஏர்வேஸ் விமானம் ஒன்று, லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில், லேண்டிங் கியர் பகுதியிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்த அந்த நபர் யார் என்று அடையாளம் காண்பதற்கு லண்டன் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மரணம் கொலை என்பதாக சந்தேகிக்கப்படவில்லை. ஆனால், முழுமையான விபரங்களை அறியும் வகையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த நபருக்கு பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் பை, உணவு மற்றும் தண்ணீர் ஆகிய பொருட்கள் லேண்டிங் கியர் பகுதியில் விசாரணைக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த மனிதரின் உடல், தென்மேற்கு லண்டன் பகுதியில் சூரியக் குளியல் எடுத்துக்கொண்டிருந்த ஒரு நபரின் அருகில், விமானத்திலிருந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]