சிதம்பரம்: பேருந்து நிலையில், உட்கார்ந்திருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் வீடியோ வைரலாகி பெற்றோர்களிடையே யும், பொதுமக்களிடையேயும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த  வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டும் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. இந்த சம்பவம், சிதம்பரம் காந்தி சிலை அருகில் உள்ள சிறு கிராமங்களுக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தத்தில் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன்,  பள்ளி சீருடையில் இருந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தாலி கட்டினார். அப்போது,  உடன் இருக்கும் சிலர் அவர்களை உற்சாகப்படுத்தி காகிதங்களை பூ போல தூவினர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தாலி கட்டிய  மாணவன் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அதுபோல மாணவியும் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்த காவல்துறையினர், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.  இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி  ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.  மாணவனுக்கு காவல்துறை அறிவுரை கூறியதுடன், இருவரின் பெற்றோர்களிடமும் அறிவுரை கூறியதுடன், எச்சரிக்கை செய்தும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூன்று நாட்கள் கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்j நிலையில், இந்த வீடியோவை தனதுமுகநூல் பக்கத்தில் வீடியோ பாலாஜி கணேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்மீது,  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.