காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் அருகே உள்ள தாசரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மருதநாயகம். மில் தொழிலாளி. அதே மில்லில் தங்கராஜ் மகள் நந்தினி என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் அவர்கள் கோவையில் சென்று தங்கி இருந்தனர்.

நந்தினியின் தந்தை அவர்களை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். மருதநாயகம் தனது காதலி நந்தினியை புளிமரத்துக் கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு சேலை மற்றும் தாலியுடன் வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வரவே இல்லை.

இது குறித்து நந்தினியின் தந்தை தங்கராஜ் வேடசந்தூர் போலீசில் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி. சிவக்குமார் மருதநாயகத்தை அழைத்து விசாரித்தார். ஆனால் மருதநாயகம் தான் நந்தினியுடன் சேர்ந்து வாழ முடியாது என மறுத்து விட்டார்.

இதனையடுத்து அவர் மீது ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், உறவு வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.