சென்னை: மாமூல் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின்பேரில், மயிலை திமுக நிர்வாகி பாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையை திமுக தலைமை எடுத்துள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகளின் வட்டம், மாவட்டம் உள்பட பல நிர்வாகிகள் வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் கட்டுவோர் மற்றும் சாலைகளில் கட்டுமான பொருட்கள் வைத்திருப்போர் போன்றவர்கள் உள்பட பல பகுதிகளில் மாமூல் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதுபோல, தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், மயிலைப்பூர் பகுதி தி.மு.க., முன்னாள் வட்ட செயலரான மயிலை பாலு . தற்போது மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர், அந்த பகுதியில் வசித்து வரும், சங்கரநேந்தரலயா மருத்துவமனையில் பணிபுரியும் கண் டாக்டர் ஒருவர்ல கட்டுமானப்பணி செய்து வருவதை அறிந்து, அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் தரப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், உடனே மயிலை பாலுவை எச்சரித்ததுடன், கட்சியில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ஆர்.பாலு கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.