சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணாக, மின்வாரிய பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று மின்கண்கீடு செய்யாமல், மின் கட்டணம் குறித்த நுகர்வோர்களுக் அனுப்பியுணுள்ள தகவலில் பெரும் குளறுபடி நடைபெற்றுள்ளது. மின் கட்டணத் தொகையை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மின்வாரியதில் புகார் அளித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து, மின் பயன்பாட்டு கணக்கீடு செய்யும் பணி நடக்கவில்லை. இதனால், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்தது.அதன்படி, ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், முந்தைய கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த முன்வந்துள்ளனர். இந்த நிலையில், மின்சார வாரியம் தரப்பில் இருந்து மின்கட்டணம் குறித்து குறுஞ்செய்தி நுகர்வோர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில், மின் கட்டணம் மிகவும் அதிகமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை காணும் பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்து மின்வாரியத்தை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார வாரியம் கடந்த ஆண்டு (2020) இதே மாதங்களில் நுகர்வோர்கள் உபயோகப்படுத்திய மின் கட்டணத்தையே, தற்போது அனுப்பி உள்ளதாக நுகர்வோர்கள் புகார் கொடுத்துள்ளதுடன், பணம் கட்டவும் மருத்து வருகின்றனர். மின்வாரிய பணியாளர்கள் வீடுகளுக்கு  மதிப்பீடு செய்யாத நிலையில், தற்போது குறைந்த அளவிலேயே மின்சாரம் உபயோகப்படுத்தி இருக்கிறோம், ஆனால், மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக கொந்தளித்து வருகின்றனர். கடந்த மாதங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வெயிலும் இல்லை, மேலும், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு, சொந்த ஊர்களிலேயே வசித்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, எப்படி கடந்த ஆண்டு பில்தொகையை கட்ட முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக மின்வாரிய எண்ணுக்கு அழைத்து புகார் கூற நினைத்தால்,அந்த எண் ஒருபோதும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனா தொற்று முடக்கம் காரணமாக, வாழ்க்கையை சமாளிக்கவே, சிரமப்படுகின்ற ஒரு நேரத்தில், தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு இதே மாதத்தின்  மின்கட்டண பில்லை கட்டச்சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள வேளச்சேரி நபர் ஒருவர், தங்களது வீடு நான்கு மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது, ஆனால் எங்களுக்கு 4,500 ரூபாய்க்கு மின்சார பில் வந்துள்ளது என கொந்தளித்துள்ளார்.

இதுகுறித்து.  தமிழ்நாடு மின்சார வாரிய (டி.என்.இ.பி.) அதிகாரிகளின் கூற்றுப்படி, “பூட்டுதல் காலத்தில் மின்சார நுகர்வு குறிப்பிடப்படவில்லை என்றால் (அதாவது, முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60 வது நாள் இந்த காலகட்டத்தில் வீழ்ச்சியடைந்தால்), நுகர்வோர் 2019 ஆம் ஆண்டின் அதே மாதத்தில் கணக்கிடப்பட்ட தொகையை செலுத்த வேண்டும் ( அப்போது தொற்றுநோய் இல்லை), என தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிக கட்டணம் என்று கூறுபவர்கள்,   மின்சார நுகர்வு குறித்த  மீட்டர் எண் கொண்ட  புகைப்படத்தை அனுப்பினால், அவர்களின் மின் கட்டணம் சரி செய்யப்படும் என்றும், இல்லையென்றால்,  கடந்த ஆண்டின் மின்கட்டணம்  கணக்கீட்டின்படி அவர்கள் மின் கட்டணம்  செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  முந்தைய மாத பில்லிங்கை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதற்கான முந்தைய அறிவுறுத்தலைத் தொடர்ந்து (மே 2019 அல்லது மார்ச் 2021 கண்கீடு அடிப்படையில் தொகை) டாங்கெட்கோ சுய மதிப்பீட்டு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த கட்டண  சிக்கலை சரிசெய்ய, https://www.tnebnet.org/awp/sendSuccess  என்று புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது குறித்து பொதுமக்களுக்கு தெரியாததால், அவர்களில் பெரும்பாலோர் தொகையை செலுத்த சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.