கொல்கத்தா

ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு சோனியா காந்திக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சட்டசபையில் ஒரு இடத்திலும்,  மக்களவையில் இரு இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.   பாஜக மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது.    அதே போல மேற்கு வங்க இடைத்தேர்தலிலும் பாஜக திரிணாமுல் காங்கிரஸிடம் தோற்றுள்ளது.

பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் சார்பில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மம்தா முன்பே ஒப்புக்கொண்ட சில நிகழ்வுகளால் பங்கு பெறவில்லை.     நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவலை மம்தா கூறினார்.   அத்துடன் காங்கிரஸ் வெற்றிக்காக தனது பாராட்டுக்களை சோனியா காந்திக்கு  தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும், “பாஜகவின் பின்னடைவு ஆரம்பித்து விட்டது.  இனி ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு தோல்வி தான் கிடைக்கும்.   மாநிலக் கட்சிகள் தற்போது ஒன்றிணைந்து பாஜகவுடன் தேர்தலில் போரிட வேண்டும்.   நேருக்கு நேர் போட்டி என்றால் மக்கள் விரோத பாஜக மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என தோன்றுகிறது.”  என மம்தா குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தியும் மேற்கு வங்க இடைத்தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி அடைந்ததற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.