கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கள் முடங்கின. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். ஊரடங்கு தளர்வு அமலானதும் பல நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்து வெளியில் புறப்பட்டு தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சமீபத்தில் காரை எடுத்துக் கொண்டு பண்ணை வீட்டுக்கு சென்று நடை பயிற்சி செய்தார். ஆனால் ஒரு நடிகர் மட்டும் வீட்டைவிட்டு வெளியில் வராமல் முடங்கியே இருக்கிறார்.


தன்னால் வீட்டுக்குள் எவ்வளவு நாள் வெளியில் வராமல் தங்கி இருக்க முடியும் என்பதை பார்க்கப் போவதாக தனக்கு தானே சபதம் செய்துக்கொண்டு யார் சொன்னாலும் வெளியில் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார். அவர் வேறுயாருமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிதான் .
இதுகுறித்து அவரது மகன் துல்கர் சல்மான் கூறும்போது.’எவ்வளவு நாட்கள் வீட்டுக் குள்ளேயே இருக்க முடியும் என்பதை தெரிந்துக் கொள்ளும் விதமாக இந்த ஊரடங்கை எனது தந்தை பயன்படுத்தி வருகிறார். இதற்காக அவர் சபதமே எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் அப்படி இருக்க முடிய வில்லை. ஊரடங்கு தளர்வில் நான் வெளியில் வந்தேன். காரில் ஒரு ரவுண்டு போய்விட்டு வரலாம் என்று அப்பாவை அழைத்தபோது அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை’என்றார்.

 

[youtube-feed feed=1]