கொல்கத்தா:

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளுக்கு இந்தியா முழுமையில் இருந்தும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924ம் வருடம் பிறந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ”திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கருணாநிதி எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், என்றும் அவர் மகிழ்வுடன் இருக்க வேண்டுகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.