கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மமதா அளித்துள்ள விளக்கம் வருமாறு: மத்திய ஆயுத காவல் படைக்கு எதிராக வாக்காளர்களை திரட்ட எந்த முயற்சி மேற்கொள்ளவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை நான் மீறவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவில் மத்திய படைகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மத்திய படைகள் பற்றிய கருத்து குறித்து அவரது நிலைப்பாட்டை ஏப்ரல் 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மமதா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.