டில்லி

ரசியல் விரோதம் இருந்த போதும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்கள் அனுப்பி உள்ளார்.

பாஜக மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.  தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவும் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸும் ஒன்றை ஒன்று கடுமையாகக் குற்றம் சாட்டி பிரசாரம் செய்து வந்தன.  தேர்தலுக்கு பிறகும் இந்த மோதல் தொடர்ந்தது.

மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திருணாமுல் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுப் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தன.   இது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றது.  புயல் நிவாரண நிதி கூட்டத்திலும் மம்தா வந்து 10 நிமிடங்களில் கிளம்பியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.   மேற்கு வங்கத்துக்குத் தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

அவ்வாறு இருக்க மம்தா பானர்ஜி, அரசியல் வெறுப்பை மறந்து பிரதமர் மோடிக்கு மாம்பழங்கள் அனுப்பி உள்ளார்.  தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ பருவம் ஆகும்.  இத்துடன் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர்கள், ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோருக்கும் மம்தா பானர்ஜி மாம்பழங்களை அனுப்பி உள்ளார்.

அது மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மம்தா மாம்பழங்கள் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.