கொல்கத்தா:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில், முதல்வர்  மம்தா  தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி நடத்தி வருகின்றனர்.

மத்தியபாஜக அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மேற்குவங்கம், பஞ்சாப் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,நேற்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. இன்று சென்னை, டெல்லி உள்பட  நாடு முழுவதும்  மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை யில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவின்  ரெட் ரோட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி ஜோராசங்கோ தாகுர்பாரியில் இந்த பேரணி நிறைவடைய உள்ளது.  பேரணியில் முதல்வர் மம்தா நடந்து வருகிறார். அவருடன் ஏராளமான  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் பேரணியில் பங்கேற்று உள்ளனர்.