மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.

சந்தேஷ்காலி விவகாரத்தை அடுத்து மத்திய பாஜக அரசுடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

மம்தா பானர்ஜியின் தன்னிச்சையான நடவடிக்கையால் இந்தியா கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாமாக வெளியேறி உள்ளது.

இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கையையும் மம்தா பானர்ஜி இழந்துவிட்டார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக-வை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக-வுக்கு சாதகமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சௌத்ரியின் சொந்த தொகுதியான பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பத்தானை நிறுத்தியிருப்பதன் மூலம் மம்தா பானர்ஜி அவரை அவமதித்துள்ளார்.

உண்மையில் யூசுப் பத்தானை கௌரவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி நினைத்திருந்தால் அவரை ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று விமர்சித்தவர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட மேலும் சில வேட்பாளர்களின் தேர்வையும் விமர்சித்தார்.