சென்னை

திமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தாம் துரை வைகோவுடன் இணைந்து கடசிக்கு உறுதுணையாக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா,

”சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கட்சியில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கட்சி நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.

பொதுச்செயலாளர் வைகோவுக்கும், கட்சியின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன். இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், தொண்டர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நானும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் இணைந்த கரங்களாக வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம். கட்சியைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்”

என்று அறிவித்துள்ளார்.