நியுயார்க்

ந்தியா காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக ஐநாசபை கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளுக்கான விதி எண் 370 ஐ விலக்கிக்கொண்டது.   அத்துடன் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   இதையொட்டி மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவில் மலேசியப் பிரதமரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தனர்.  அத்துடன் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய இஸ்லாமிய மத போதகரான ஜகிர் நாயக் கை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஐநா சபை தீர்மானம் குறித்து அறிந்த பின்னரே காஷ்மீர் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஐநா சபை 74 ஆம் பொதுக் குழுக் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசி உள்ளார்.   அவர் தனது உரையில், இந்தியா காஷ்மீர் மீது படை எடுத்து ஆக்கிரமித்துள்ளது.   இது குறித்து ஐநா சபையின் தீர்மானத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.   இதற்கு இந்தியா பல காரணங்கள் கூறலாம்.   ஆனால் அவற்றில் எதுவும் சரியானது இல்லை.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்தியா முடிவு எடுத்திருக்க வேண்டும்.   ஐநா சபை தீர்மானங்களை மீறி இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஐநாவை அவமதிக்கும் மற்றும் சட்டத்தை மீறிய செயலாகும்.   தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடு அல்லது சர்வதேச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.