95 வயதில் புதுக்கட்சி தொடங்கிய மலேசிய  முன்னாள் பிரதமர்..

Must read

95 வயதில் புதுக்கட்சி தொடங்கிய மலேசிய  முன்னாள் பிரதமர்..

’காதலிக்க வயதில்லை’’ என்று இதுவரை சொல்லி வந்தார்கள். இனிமேல் ‘கட்சி ஆரம்பிக்கவும் வயது கிடையாது’’ என்று சொல்லலாம்.

காரணம்?

மலேசிய நாட்டில் இரு முறை பிரதமராக இருந்த மகாதீர் முகமது திடீரென புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அவருக்கு வயது- 95.

கோலாலம்பூரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மகாதீர் புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

‘’நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக நான் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய கட்சியை ஆரம்பித்துள்ளேன். இன்னும் கட்சிக்குப் பெயர் சூட்டவில்லை. விரைவில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்படும். ஆளும் கட்சியான  ‘PERIKATAN NASIONAL COALITION’ மற்றும் எதிர்க்கட்சியான ‘’PAKATAN HARAPAN COALITION ’’ ஆகிய இரு கட்சிகளுடன் எங்கள் புதிய கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளாது’’ என்று மகாதீர் முகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவில் திடீர் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே மகாதீர் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

இந்த புதுக்கட்சிக்குத் தலைவர் பெயரையும் மகாதீர் அறிவித்துள்ளார்.

அவர் பெயர், முக்ரீஸ் மகாதீர்.

இவர் வேறு யாருமல்ல, மகாதீரின் மகன் தான்.

-பா.பாரதி.

More articles

Latest article