கோலாலம்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 8ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் யாசின், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்துது, நாடு முழுவதும கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நாள்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய நாட்டின் சுகாதார இயக்குனர் ஹிஷாம் அப்துல்லா, அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமான காலக்கட்டம், மோசமான நிலையில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
தற்போது ஜூன் 7–ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், அதை நீங்கிவிட்டு ஜூன் 1ந்தேதி முதல் 14ந்தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.