திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய பெண்களிடையே மல்லிகைப்பூவுக்கு தனி மவுசு உண்டு. அதுவும் தென்மாவட்ட பெண்களிடையே மல்லைக்பூக்கு பெரும் வரவேற்பு உண்டு. அனைத்து வகையான  நிகழ்வுகளிலும் பெண்கள் மல்லைகைப்பூ சூடி தங்களை பெருகூட்டிக்கொள்வர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி,  கேரளாவை சேர்ந்த பிரபல நடிவகை நவ்யா நாயர்  வெளிநாட்டுக்கு  மல்லிகைப்பூ சரத்தை எடுத்துச்சென்றுள்ளார்.  அவரை சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறி உள்ளது.

அதாவது,  மலையாள நடிகை நவ்யா நாயர் மல்லிகைப் பூவை எடுத்துச் செல்வதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு AUD 1,980 (சுமார் ₹1.14 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓணம் விழாவை ஆஸ்திரேலியாவில் கொண்டாடும் வகையில்,    அவர் ஆஸ்திரேலியாவுக்கு  மல்லிகைப்பூவைக் கொண்டு சென்றதால், அங்குள்ள விமான நிலைய விதிமுறைகளை மீறியதாகக் கூறி சுமார் 1.14 லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் பூக்களை எடுத்துச் செல்வது குறித்த கடுமையான விதிகள் இருப்பதால், அவர் அபராதம் செலுத்த நேரிட்டது என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.   இந்தச் சம்பவம் குறித்த செய்திகள், சோஷியல் மீடியாவில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் கவனத்தைப் பெற்றன.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   கொச்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தனது தந்தை தனக்காக மல்லிகைப் பூக்களை வாங்கியதாக நினைவு கூர்ந்ததுடன்,  இந்த  அபராதம் கடுமையாக  இருந்தபோதிலும்,   இது ஒரு கற்றல் அனுபவமாக இருந்ததாக தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவரித்துள்ளார். அத்துடன்,   இன்ஸ்டாகிராமில், மல்லிகை கஜ்ராவுடன் தான் இருக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளதுடன், மலையாளத்தில் ஒரு கிண்டலான தலைப்பைச் சேர்த்துள்ளார், அதில்  “அபராதம் செலுத்துவதற்கு சற்று முன்பு நடந்த நாடகம்!!!”  என குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியாவின் மலையாளி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மனோரமா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டும் செய்தி வெளியிட்டுள்ளன.