மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவருக்கும் , பிரியங்கா என்பவருடன் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 11-ஆம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியங்கா, 12-ஆம் தேதி புதன் கிழமை பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.

தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார் பிரியங்கா.

பிரியங்காவின் சாவுக்கு உன்னி தான் காரணம் என அனைவரும் குற்றம்சாட்டினர். அதோடு அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உன்னியை நேற்று போலீஸார் கைது செய்தனர்.