கொச்சி:

கசப்பான நிகழ்வை மறந்துவிட்டு பாவனா மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது என்று மலையா நடிகர் பிர்திவ்ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிலதினங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக  முக்கிய குற்றவாளியான புல்சார் சுனில் கொச்சியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டார். நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சம்பவம் தமிழ் மற்றும்  மலையாள திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  நடிகை பாவனா அவரது அடுத்தபடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இதுகுறித்து மலையாள நடிகர் பிர்திவி ராஜ் தனது முகநூலில், “நடந்ததை நினைத்து சோர்ந்து விடாமல் நடிகை பாவனா மீண்டும் தனது அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கறார். அவரது அசாத்தியமான துணிச்சலை பாராட்டுகிறேன்” என  குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட தைரியமுள்ள அசாதாரண பெண்ணை வாழ்க்கையில் முதல்முறை பார்ப்பதாகவும் அவர் புகழ்ந்திருக்கிறார். எந்த நிகழ்வும் பாவனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் பிர்திவ்ராஜ் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் பெண்களை தவறாக சித்திரித்த படங்களில் நடித்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். இனிமேல் பெண்களை மதிக்காத படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.