இஸ்லாமாபாத்:

2012ம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்ட பிறகு மலாலா தற்போது பாகிஸ்தான் வந்துள்ளார்.

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியை சேர்ந்த 15 வயது மலாலா பெண் கல்வியை ஆதரித்து குரல் கொடுத்து வ ந்தார். பத்திரிகைகளிலும் கட்டுரை எழுதினார். இதனால் கோபம் அடைந்த தலிபான் பயங்கரவாதிகள் 2012-ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி அன்று பள்ளிப் பேருந்தில் சென்ற அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த மலாலா பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். பெற்றோருடன் தொடர்ந்து லண்டனிலேயே வசித்து வருகிறார். 2014-ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளவயதில் இந்த விருதை பெற்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில்தான் துப்பாக்கி சூடு நடந்த பிறகு முதல் முதலாக தற்போது மலாலா 4 நாள் பயணமாக பெற்றோருடன் பாகிஸ்தான் வந்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் தாக்ககூடும் என்பதால் அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அப்பாசி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார்.