சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று சோதனை முறையில் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு சார்பில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீடுகளுக்கு அருகிலேயே நடக்கும் இந்த முகாமில், பொது மக்கள் பங்கேற்று புதிய மின் இணைப்பு, மின் கட்டண விகித மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உட்பட ஆறு மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, தமிழக அரசு சார்பில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு முகாம்கள் இன்று சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. Service delivery @ Door steps என்பதை அடிப்படையாக கொண்ட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகிலேயே நடக்கும் இந்த முகாமில், பொது மக்கள் பங்கேற்று புதிய மின் இணைப்பு, மின் கட்டண விகித மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உட்பட ஆறு மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல, வருவாய் துறை, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாமில் 10 துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். முகாமில் பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.