சென்னை: நடிகை  கவுதமியின் ரூ.11 கோடி மதிப்புள்ள நில மோசடி  தொடர்பாக தலைமறைவாக உள்ள அழகப்பன், நாச்சியம்மாள் குறித்து சென்னை காவல் துறை  லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

நடிகை கௌதமியின் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக நடிகை கௌதமியின் புகாா் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து பலர் தலைமறைவாக உள்ளதால் பாஜக பிரமுகரான அழகப்பன், நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூரில் தனக்குச் சொந்தமான சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு, தனக்கு வெறும் ரூ.4.1 கோடி கொடுத்து ஏமாற்றியதாக, நடிகை கௌதமி சிலர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவுசெய்து, தலைமறைவாக இருந்தவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பலராமன் என்பவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கைதுசெய்திருக்கிறது. மேலும்,  சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான அழகப்பனையும், அவரது மனைவி நாச்சியாமாலையும் கைது செய்ய காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில்,  புகாரை  விசாரித்து  வரும் திருவண்ணாமலை மாவட்ட  குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதாவிடம்,  நடிகை கவுதமி சாா்பில், அவரது வழக்குரைஞா் ஆஜராகி விளக்கம் அளித்தாா். இந்த நிலையில், நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தொடர்ந்து அழகப்பன், நாச்சியாள் உள்பட பலர் தலைமறைவாக இருந்து வருவதால் அவர்களை பிடிக்கும் வகையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .